வேளாண் சட்டங்களை நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
"மோடி அரசு தனது அதிகார ஆணவத்தைக் கைவிட்டு, மூன்று கருப்பு சட்டங்களையும் நிபந்தனையின்றி உடனடியாகத் திரும்பப் பெற்று குளிரிலும் மழையிலும் போராடும் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இதுவே ராஜ தர்மமாக இருக்க முடியும். உயிரிழந்த விவசாயிகளுக்கும் இது உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள அரசு தயக்கம் காட்டுவதால் இதுவரை 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
சுதந்திரத்துக்குப் பிறகு முதல்முறையாக ஈகோ நிறைந்த அரசு ஆட்சிக்கு வந்துள்ளது. நாட்டு மக்களுக்கு உணவளிப்பவர்களின் போராட்டத்தையும் வேதனையையும் இவர்களால் புரிந்துகொள்ள முடியாது."