இந்தியா

உலகின் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் பிரதமர் மோடிக்கு முதலிடம்

3rd Jan 2021 04:04 PM

ADVERTISEMENT


உலகின் செல்வாக்கு மிகுந்த மற்றும் சிறந்த செயல்பாடுகளைக் கொண்ட தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலிடம் கிடைத்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் மார்னிங்க் கன்சல்ட் என்ற சர்வே நிறுவனம் அமெரிக்கா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களின் செல்வாக்கு குறித்து நடத்திய ஆய்வில், உலகின் செல்வாக்கு மிகுந்த மற்றும் சிறந்த செயல்பாடுகளைக் கொண்ட தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்களது ஒப்புதலை தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் 20 சதவீதம் பேர் அதனை ஏற்கவில்லை.  

கரோனா பெருந்தொற்று காலத்தில் பிரதமர் மோடி மேலும் சிறப்பான தலைமையை இந்தியாவுக்கு வழங்கியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருப்பதாவது:
பிரதமரின் புகழும், செயல்பாடுகளும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ADVERTISEMENT

உலகளாவிய கரோனா நோய்த்தொற்று காலத்தில் தொற்றுநோயைக் கையாண்ட விதம், நாட்டை சிறப்பாக வழிநடத்தியது, மக்களை கவனித்துக் கொண்டது மற்றும் இதுபோன்ற சவாலான காலங்களில் உலக சமூகத்திற்கு உதவுவது போன்றவை பிரதமர் மோடிக்கு கிடைத்த உலகளாவிய பாராட்டு என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா  கூறியுள்ளார்.

தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், இது நாட்டுக்கு பெருமை அளிக்கும் விஷயம் என்றும், நாட்டின் வளர்ச்சிக்காக உறுதியான தொலைநோக்கு பார்வையுடன் பிரதமர் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கரோனா நோய்த்தொற்று உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு மிகச்சிறப்பாக கையாண்டு மக்களின் வலுவான நம்பிக்கையை பெற்றுள்ளதாகவும், மார்னிங்க் கன்சல்ட் ஆய்வு நிறுவனத்தின் மதிப்பீடு பிரதமரின் திறமையான தலைமை மற்றும் கடின உழைப்புக்கு ஒரு சான்றாகும், இது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் பெருமை அளிக்கிறது என்று பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT