இந்தியா

கொச்சி-மங்களூரு இடையே குழாய் வழி எரிவாயு திட்டம்: ஜன.5-ல் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்

3rd Jan 2021 08:30 PM

ADVERTISEMENT

கொச்சி - மங்களூரு இடையேயான குழாய் வழி எரிவாயு திட்டத்தை, ஜனவரி 5ஆம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். 
காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் கர்நாடகம் மற்றும் கேரளம் மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். 
3 ஆயிரம் கோடி செலவில், 450 கி.மீ நீளமுள்ள இந்த குழாய்வழி எரிவாயு திட்டத்தை கெயில் இந்தியா நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், நாள் ஒன்றுக்கு 12 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் இயற்கை எரிவாயு, கொச்சியில் உள்ள எல்என்ஜி நிறுவனத்திலிருந்து கர்நாடகத்தில் உள்ள மங்களூருக்கு எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களை கடந்து செல்லும். 
இந்த குழாய் வழி எரிவாயு திட்டம், வீடுகளுக்கும், வாகனங்களுக்கும் சுற்றுசூழலுக்கு உகந்த இயற்கை எரிவாயுவை விநியோகிக்கும். இந்த குழாய்கள் அமைந்துள்ள  மாவட்டங்களில், வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான இயற்கை எரிவாயுவும் விநியோகிக்கப்படும். சுத்தமான எரிபொருள் நுகர்வு, காற்று மாசுவை குறைத்து, காற்றின் தரத்தை மேம்படுத்த உதவும். 

Tags : PMMODI
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT