இந்தியா

புரி ஜெகன்னாதர் ஆலயத்தில் வெளியூர் மக்களுக்கு அனுமதி

3rd Jan 2021 04:08 PM

ADVERTISEMENT

ஒடிசா மாநிலத்திலுள்ள புரி ஜெகன்னாதர் ஆலயத்தில் வெளியூர் மக்களுக்கு இன்று (ஜன. 3) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

கரோனாவால் மூடப்பட்டிருந்த புரி ஜெகன்னாதர் ஆலயம் கடந்த மாதம் 23-ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், தற்போது வெளியூர் மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் 25-ஆம் தேதி புரி ஜெகன்னாதர் ஆலயம் மூடப்பட்ட நிலையில், கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் டிசம்பர் 23-ஆம் தேதி திறக்கப்பட்டது.

டிசம்பா் 29-ஆம் தேதி முதல் உள்ளூர் பக்தா்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் வெளியூர் பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கோயிலுக்கு வரும் பக்தர்கள் கரோனா 'நெகடிவ்' சான்றிதழை அளிக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணிகளுக்காக கோயில் வளாகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Jagannath Temple
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT