இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,282 பேருக்கு கரோனா

3rd Jan 2021 07:25 PM

ADVERTISEMENT


மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,282 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 3,282 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 19,42,136 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 2,064 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 35 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 18,36,999 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 49,666 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தேதியில் 54,317 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.

ADVERTISEMENT

அங்கு குணமடைவோர் விகிதம் 94.59 சதவிகிதம். இறப்பு விகிதம் 2.56 சதவிகிதம்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT