இந்தியா

தில்லியில் கடும் குளிர்: மனவுறுதியுடன் போராட்டத்தைத் தொடரும் விவசாயிகள்

3rd Jan 2021 10:56 AM

ADVERTISEMENT

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லி எல்லைகளில் கடும் குளிருக்கு மத்தியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த சுற்று பேச்சில் எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை எனில், குடியரசு தின விழா கொண்டாடப்படும் ஜனவரி 26-ஆம் தேதி, தலைநகா் தில்லியை நோக்கி டிராக்டா் பேரணி நடத்துவோம் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மததிய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட எல்லைகளை சேர்ந்த விவசாயிகள் கடந்த 38-நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாண் சட்டங்கள் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட 6 பேச்சுவார்த்தைகளில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு முழு உடன்பாடு தெரிவிக்காததால், நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

இதனிடையே நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனில், குடியரசு தின விழாவில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்றும், ஜனவரி 23-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள ஆளுநர்களின் குடியிருப்புகளை நோக்கி டிராக்டர் அணிவகுப்பு மேற்கொள்ள உள்ளதாகவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

தில்லியில் பகல் 3 மணியளவிலேயே 3 டிகிரிக்கும் கீழான வெப்பநிலையுள்ளதால், அதிகாலை கடும் குளிரில் விவசாயிகள் போர்வைகளை போர்த்தி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் அவர்கள்  தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

Tags : Delhi farmers
ADVERTISEMENT
ADVERTISEMENT