இந்தியா

கரோனா தடுப்பூசி 110% பாதுகாப்பானது: தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு

3rd Jan 2021 04:28 PM

ADVERTISEMENT

கரோனா தடுப்பூசிகள் 110 சதவிகிதம் பாதுகாப்பானவை என்று இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் வி.ஜி.சோமாளி தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள 'கோவிஷீல்டு' மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்ஸின்’ ஆகிய தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இன்று (ஜன. 3) அனுமதி வழங்கியது.

அவசர கால பயன்பாட்டிற்காக கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும், 
பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் வி.ஜி.சோமாளி தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ''பாதுகாப்பு குறைபாடுடைய எந்த தடுப்பு மருந்துக்கும் நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை. 

ADVERTISEMENT

கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பு மருந்துகள் 110 சதவிகிதம் பாதுகாப்பானவை. காய்ச்சல், ஒவ்வாமை, வலி போன்றவை அனைத்து விதமான தடுப்பு மருந்துகளுக்குமே வரும் வழக்கமான விளைவுகள்'' என்று கூறினார்.

Tags : Corona
ADVERTISEMENT
ADVERTISEMENT