இந்தியா

ரூ.831.72 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: தில்லியில் ஒருவர் கைது

3rd Jan 2021 08:00 PM

ADVERTISEMENT

ரூ.831.72 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வரி ஏற்ப்பு செய்ததாக தில்லியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தில்லியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த குட்கா/பான் மசாலா நிறுவனத்தில் மத்திய ஜிஎஸ்டி மேற்கு ஆணையரக அதிகாரிகள் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அங்கு புகையிலைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் அனுப்பப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பதிவு செய்யப்படாத அந்த நிறுவனத்தில் 65 பேர் பணியாற்றி வந்தனர். இங்கு ரூ.4.14 கோடி அளவிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  சுமார் ரூ.831.72 கோடி அளவுக்கு இந்நிறுவனம் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்திருந்தது மதிப்பிடப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

ADVERTISEMENT

Tags : new delhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT