இந்தியா

தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்தது பெரிய திருப்புமுனை: பிரதமர்

3rd Jan 2021 11:48 AM

ADVERTISEMENT


கரோனா அவசர கால சிகிச்சைக்காக தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல் அளித்தது திருப்புமுனையான செயல் என்று பிரதமர் நரேந்திர மோடி  தெரிவித்துள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பு மருந்துக்கு பிரிட்டனைத் தொடர்ந்து இந்தியாவும் அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில் மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரையில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது, ஒப்புதல் அளிக்கப்பட்ட தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. ஒவ்வொரு இந்தியருக்கும் இது பெருமை சேர்க்கிறது. 

ADVERTISEMENT

கரோனா இல்லாத நாடாக இந்தியா உருவாகவுள்ளது. கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் கரோனா முன்களப் பணியாளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

Tags : Narendra Modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT