இந்தியா

தில்லியில் புதிதாக 424 பேருக்கு கரோனா

3rd Jan 2021 09:39 PM

ADVERTISEMENT


தில்லியில் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 424 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

68,759 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 424 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 0.62 சதவிகிதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 708 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 14 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,26,872 ஆக உயர்ந்துள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT