இந்தியா

நாட்டில் இதுவரை 17.48 கோடி கரோனா பரிசோதனை

3rd Jan 2021 10:35 AM

ADVERTISEMENT


நாட்டில் இதுவரை 17.48 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனைகளின் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரை கண்டறிந்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.

இதனிடையே நாட்டில் இதுவரை 17,48,99,783 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

நேற்று (ஜன.2) ஒரே நாளில் மட்டும் 9,58,125 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

பிரிட்டனிலிருந்து வந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்களுக்கு கரோனா இல்லையென்றாலும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். 

பிரிட்டனிலிருந்து வந்தவர்களுக்கு கரோனா உறுதியானால், அவர்களுக்கு புதியவகை கரோனா உள்ளதா என்பதை கண்டறிய அவர்களது மாதிரிகள் தேசிய மரபணு பரிசோதனை மையத்திற்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT