இந்தியா

ஜன.23-ல் ஆளுநர் மாளிகைகளை நோக்கி பேரணி: விவசாய சங்கங்கள்

2nd Jan 2021 02:20 PM

ADVERTISEMENT

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலுள்ள ஆளுநர் மாளிகைகள் ஜனவரி 23-ஆம் தேதி முற்றுகையிடப்படும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 38-வது நாளாக தில்லி எல்லைகளில் போராடி வருகின்றனர்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது தொடர்பாக அடிக்கடி மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

மத்திய அரசுடன் கடந்த 30-ஆம் தேதி நடைபெற்ற 6-ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், ஜனவரி 4-ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலுள்ள ஆளுநர் மாளிகைகள் ஜனவரி 23-ஆம் தேதி முற்றுகையிடப்படும் என்று கிராந்திகரி கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் தர்ஷன் பால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது, ''பல்வேறு மாநிலங்களிலுள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் ஜனவரி 23-ஆம் தேதி நடத்தப்படும். மேலும் குடியரசு நாளான ஜனவரி 26-ஆம் தேதி தலைநகரான தில்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்படும்'' என்று கூறினார். 

Tags : Delhi farmers
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT