தடுப்பு மருந்து குறித்து சிலரால் பரப்பப்படும் புரளிகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
தில்லியில் கரோனா தடுப்பு மருந்து ஒத்திகையை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேரில் பார்வையிட்டார்.
பின்னர் அவர் பேசியதாவது, ''கரோனா தடுப்பு மருந்து செலுத்துவதற்கு ஒத்திகை நடைபெற்று வரும் நிலையில், திட்டமிட்டு பரப்பப்படும் புரளிகளை மக்கள் நம்ப வேண்டாம். கரோனா தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
போலியோ தடுப்பு மருந்து கொடுக்கும்போது பல்வேறு விதமான புரளிகள் பரப்பப்பட்டன. ஆனால் மக்கள் போலியோ தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டனர். அதன் பலன் தற்போது போலியோ இல்லாத நாடாக இந்தியா மாறியுள்ளது'' என்று கூறினார்.
ADVERTISEMENT