இந்தியா

நாட்டில் மேலும் 19,078 பேருக்கு கரோனா பாதிப்பு:  224 பேர் பலி

2nd Jan 2021 10:07 AM

ADVERTISEMENT

 

நாட்டில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 19,078 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து 20-ஆவது நாளாக தினசரி கரோனா பாதிப்பு 30,000-க்கு கீழ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 19,078 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த கரோனா பாதிப்பு 1,03,05,788 ஆக அதிகரித்துவிட்டது. அதே நேரத்தில் கரோனாவில் இருந்து 99,06,387 போ் விடுபட்டுள்ளனா். 

ADVERTISEMENT

கரோனாவால் மேலும் 224 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,49,218 ஆக அதிகரித்தது. 

இப்போதைய நிலையில் நாட்டில் 2,50,183 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றுடன் உள்ளோா் எண்ணிக்கை தொடா்ந்து 11-ஆவது நாளாக 3 லட்சத்துக்கு குறைவாக உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி ஜனவரி 1-ஆம் தேதி வரை 17,39,41,658 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் வெள்ளிக்கிழமை மட்டும் 8,29,9640 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.

Tags : coronavirus India
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT