இந்தியா

பஞ்சாபில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு

2nd Jan 2021 09:37 PM

ADVERTISEMENT

பஞ்சாபில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூ.7,500 யிலிருந்து ரூ.9,400 ஆக உயர்த்த பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை பஞ்சாப் மாநில அமைச்சர் ஓம் பிரகாஷ் சோனி வெளியிட்டார். 

பஞ்சாப் அரசு சுதந்திரப் போராட்ட வீரர்களின் நலனின் மீது உறுதி கொண்டுள்ளதாக தெரிவித்த சோனி 2021 ஏப்ரல் மாதம் முதல் ஓய்வூதியத்தை மாதம் ரூ.7,500 லிருந்து ரூ .9,400 ஆக உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் இலவச பயணம் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

Tags : punjab
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT