இந்தியா

‘பாஜகவின் கரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள மாட்டேன்’: அகிலேஷ் யாதவ்

2nd Jan 2021 05:33 PM

ADVERTISEMENT

பாஜக அரசு வழங்கும் கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள மாட்டேன் என உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் சனிக்கிழமை தெரிவித்தார்.

கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் சனிக்கிழமை தொடங்கியது. இந்நிலையில் பாஜக அரசு வழங்கும் கரோனா தடுப்பூசி மீது தனக்கு நம்பிக்கை இல்லை என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், “பாஜக அரசை நம்ப முடியாது. நான் கரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள மாட்டேன்” எனத் தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசு கைதட்டம் மற்றும் பாத்திரங்களைத் தட்டுவதன் மூலம் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துகிறது. தனது அரசு அமைந்தவுடன் அனைவருக்கும் இலவச தடுப்பூசி கிடைக்கும் என அகிலேஷ் தெரிவித்தார்.

ADVERTISEMENT

Tags : Akhilesh Yadav
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT