ராஜ்கோட்: குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் கோண்டல் பகுதியில் பருத்தி ஏற்றிவந்த டிரக்குடன் கார் மோதிய வேகத்தில், தீப்பற்றி எரிந்தது. இதில் காரில் வந்த 3 பெண்கள் உடல்கருகி பலியாகினர்.
இந்த கோர விபத்து கோண்டல் - ராஜ்கோட் தேசிய நெடுஞ்சாலையில் பிலியாலா கிராமத்துக்கு அருகே காலை 6 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக கோண்டல் தாலுகா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மூன்று பெண்களுடன் வந்து கொண்டிருந்த காரும், பருத்தி ஏற்றி வந்த டிரக்கும் மோதிக் கொண்டதில் இரண்டு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தது. காரில் தீப்பற்றியதும் மூன்று பெண்களாலும் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டதால், மூவரும் எரிந்து பலியாகினர். கார் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்த தீயைக் கட்டுப்படுத்தினர்.
உயிரிழந்தவர்கள் ரேகா ஜடேஜா (62), ராஸிக் ராய்ஜடா (80), முகுந்த்பா ராய்ஜடா (45) ஆகியோர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.