இந்தியா

காங். முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்

2nd Jan 2021 11:45 AM

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டா சிங் உடல்நலக் குறைவு காரணமாக தில்லியில் இன்று (ஜன.2) காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 86.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பூட்டா சிங்
சுயநினைவை இழந்ததால் கடந்த அக்டோபர் மாதம் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே இன்று காலை 5.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

அவரது மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த பூட்டா சிங், சாத்னா மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று முதல்முதலாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு 7 முறை தொடர் வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

Tags : காங்கிரஸ்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT