இந்தியா

ஜன. 6 முதல் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு விமான சேவை: ஹர்தீப் சிங்

2nd Jan 2021 03:32 PM

ADVERTISEMENT

இந்தியாவிலிருந்து ஜனவரி 6-ஆம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

பிரிட்டனிலிருந்து வந்தவர்களால் இந்தியாவில் புதிய வகை கரோனா பரவி வருவதால், இந்தியா - பிரிட்டன் இடையிலான விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தில்லியில் இது தொடர்பாக பேசிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, இந்தியாவிலிருந்து ஜனவரி 6-ஆம் தேதி  முதல் பிரிட்டனுக்கு விமானங்கள் இயக்கப்படும் என்றும், பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

வாரம் 30 விமானங்கள் இயக்கப்படும் என்றும், இதில் இரு நாடுகளும் தலா 15 விமானங்கள் இயக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த கால அட்டவணை ஜனவரி 23-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படும் என்றும் அமைச்சர் ஹர்தீப் சிங் கூறினார்.

ADVERTISEMENT

Tags : Delhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT