இந்தியா

தில்லி: இருசக்கர வாகன விற்பனையகத்தில் தீ விபத்து

2nd Jan 2021 01:35 PM

ADVERTISEMENT

தில்லியில் விலையுயர்ந்த இருசக்கர வாகன விற்பனையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான வாகனங்கள் எரிந்து சாம்பலாகின.

தில்லியின் மோதி நகரில் உள்ள கட்டடத்தில் முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் விலையுயர்ந்த இருசக்கர வாகன விற்பனையகம் செயல்பட்டு வந்தது.

இதனிடையே இன்று (ஜன.2) அதிகாலை 1.30 மணியளவில் விற்பனையகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 

உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 25 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ADVERTISEMENT

இதில், இரு தளங்களிலிருந்த விலையுயர்ந்த இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. அதன் சேத மதிப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Delhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT