இந்தூரில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
மத்தியப் பிரதேசம், இந்தூரில் இன்று பிற்பகல் 1.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.3ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தூரில் இருந்து தென்-மேற்கில் 157 கிலோ மீட்டர் தொலைவிலும், 5 கிலோமீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
எனினும் நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.