இந்தியா

ஜன. 14-க்குள் கரோனா தடுப்பூசி: உ.பி. முதல்வர்

2nd Jan 2021 06:01 PM

ADVERTISEMENT

உத்தரப் பிரதேசத்தில் ஜனவரி 14-ஆம் தேதிக்குள் கரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், கடந்த மார்ச் மாதம் முதல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையின்  கீழ் கரோனா தடுப்பூசிக்கு எதிரான பிரசாரம் நடைபெற்று வருகிறது.

ஜனவரி 5-ஆம் தேதி முதல் மாநிலத்தில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் 14-ஆம் தேதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கரோனா தடுப்பூசி கொண்டுவரப்படும் என்று கூறினார்.

ஒரு சில மாநிலங்களில் இன்று முதல் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்திலும் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படும் என்று குறிப்பிட்டார். 

ADVERTISEMENT

Tags : uttar pradesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT