கரோனா தடுப்பூசி நாடு முழுவதும் இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
தில்லியில் கரோனா தடுப்பு மருந்து ஒத்திகையை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.
அப்போது தில்லியில் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்த அவர், தில்லி மட்டுமல்ல நாடு முழுவதுமே கரோனா தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்படும் என்று கூறினார்.
ADVERTISEMENT