இந்தியா

மேற்கு வங்கம் செல்ல ஜெ.பி. நட்டா மீண்டும் திட்டம்

2nd Jan 2021 02:00 PM

ADVERTISEMENT

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா மீண்டும் மேற்கு வங்கம் செல்ல திட்டமிட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மேற்கு வங்கத்தின் பிர்பும் பகுதிக்கு ஜனவரி 9-ஆம் தேதி பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அங்கு பொதுமக்களை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி பிரசாரம் மேற்கொள்ளும் வகையிலும், தேர்தலுக்கு தயாராகும் வகையிலும் பாஜக தலைவர்கள் மேற்கு வங்கத்திற்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் கடந்த மாதம் 10-ஆம் தேதி மேற்கு வங்கத்திற்கு சென்ற பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் இரண்டாவது முறையாக ஜனவரி 9-ஆம் தேதி மீண்டும் அவர் மேற்கு வங்கத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். 

அங்கு பாஜக பிரமுகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும், பொதுமக்களை சந்தித்து பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags : west bengal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT