இந்தியா

இரண்டாவதாக கோவேக்ஸின் தடுப்பூசிக்கு ஒப்புதல்

2nd Jan 2021 07:58 PM

ADVERTISEMENT


பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்த இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

கோவேக்ஸின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க கூடுதல் தரவுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என நிபுணர் குழு வெள்ளிக்கிழமை கேட்டிருந்த நிலையில், இன்று பிற்பகல் அதைத் தயாரித்த ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தைச் சந்திப்புக்கு அழைத்திருந்தது. 

இதைத் தொடர்ந்து, அவசர பயன்பாட்டுக்கு  கோவேக்ஸின் பரிந்துரை செய்யப்பட்டது. எனினும், இறுதி முடிவை இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பே எடுக்கவுள்ளது. 

முன்னதாக, சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா தயாரித்த கோவிஷீல்ட் - ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு நிபுணர் குழு பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT