இந்தியா

குஜராத்தில் 4 பேருக்கு புதிய வகை கரோனா

2nd Jan 2021 04:35 PM

ADVERTISEMENT

குஜராத்தில் பிரிட்டனிலிருந்து திரும்பிய 4 பேருக்கு புதிய வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது. 

பிரிட்டனிலிருந்து வந்த மேலும் 15 பேரின் மாதிரிகள் தேசிய மரபணு பரிசோதனை மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

15 பேருக்கு கரோனா 'பாஸிடிவ்' என முடிவுகள் வந்துள்ள நிலையில், அவர்களுக்கு புதிய வகை கரோனா உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் கரோனா பரிசோதனை உறுதி செய்யப்பட்டால் அவர்களது ரத்த மாதிரிகள் தேசிய ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறது.

ADVERTISEMENT

பரிசோதனையில் கரோனா இல்லையென்றால் 15 நாள்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே குஜராத்தில் 4 பேருக்கு புதிய வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Tags : குஜராத்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT