இந்தியா

தெலங்கானாவில் ஒரே குடும்பத்தில் 22 பேருக்கு கரோனா

2nd Jan 2021 10:55 AM

ADVERTISEMENT


ஹைதராபாத்: ஒரு பக்கம் கரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், அதிதீவிர கரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வருவது பொதுமக்களிடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தெலங்கானாவின் சூர்யாபெட் நகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 22 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சில நாள்களுக்கு முன்பு, இறுதிச் சடங்கு ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சூர்யாபெட் நகரில் ஏராளமான குடியிருப்புகள் அடங்கிய ஒரே வளாகத்தில் இவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் யாருக்குமே கரோனா அறிகுறி இல்லை என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அனைவருமே வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இறுதிச் சடங்கில் பங்கேற்றுத் திரும்பிய ஒருவருக்கு ஏற்கனவே காசநோய் இருந்து அதற்கான பரிசோதனைக்கு வந்த போது, அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் 38 பேரும் தனிமைப்பட்டு அவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதை அடுத்து 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு இவ்வாறு ஒரே குடும்பத்தில் இவ்வளவு அதிகம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த குடும்பத்தைச் சேர்ந்த யாரும் வெளிநாடு சென்று வரவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

Tags : coronavirus india Telangana
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT