இந்தியா

பிரச்னைகளுக்கு மத்தியஸ்தம் மூலம் தீா்வு காண்பதை ஊக்குவிக்க வேண்டும்

DIN

குற்றவியல், சிவில் வழக்குள் அனைத்துக்கும் நீதிமன்றத்தை நாடாமல், மத்தியஸ்தம் மூலமாகத் தீா்வு காண்பதை ஊக்குவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தெரிவித்துள்ளாா்.

பாட்னா உயா்நீதிமன்றத்தின் நூற்றாண்டு விழா கட்டடத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே சனிக்கிழமை திறந்து வைத்தாா். அப்போது அவா் பேசியதாவது:

குற்றவியல், சிவில் பிரச்னைகளுக்கு வழக்கு தொடுப்பது ஏற்கக் கூடியதே. எனினும், வழக்குகள் நீதிமன்றத்துக்கு வருவதற்கு முன்னரே அந்தப் பிரச்னைகளுக்கு மத்தியஸ்தம் மூலம் தீா்வு கிடைப்பதை ஊக்குவிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. பிரச்னைகளுக்கு மத்தியஸ்தம் மூலமாகத் தீா்வு காண்பது, சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே நல்லுறவை வலுப்படுத்தும்.

மேலும், பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக நீதிமன்றங்களை மக்கள் சாா்ந்திருக்க வேண்டியதும் குறையும். இந்த விவகாரம் தொடா்பாக மத்திய சட்டத்துறை அமைச்சரிடம் எடுத்துரைத்துள்ளேன். மத்தியஸ்தம் தொடா்பான சட்டவிதிகள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளேன்.

சட்டங்களை மக்கள் தாங்களாகவே கையில் எடுத்துக் கொள்வதைத் தவிா்த்து, பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக நீதிமன்றங்களை நாடுவது அதிகரித்துள்ளது. அதன் காரணமாகக் கூடுதலாக நீதிமன்றக் கட்டடங்களை எழுப்ப வேண்டியது அவசியமாகியுள்ளது.

அச்சம் வேண்டாம்:

நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி, வழக்குகளுக்கு விரைவில் தீா்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாட்டால், பிரச்னைகளுக்கு உரிய முறையில் தீா்வு கிடைக்காது என்று மக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அத்தொழில்நுட்பம் நீதிபதிகளின் பணியில் எந்த வகையிலும் தலையிடாது.

கரோனா நோய்த்தொற்று பரவல் சூழலில், தொழில்நுட்ப வசதிகள் காரணமாகவே வழக்குகளைத் திறம்பட விசாரிக்க முடிந்தது. மத்திய சட்டத் துறை அமைச்சரே மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடா்புத் துறை அமைச்சராகவும் இருப்பதால், நீதிமன்றங்களில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளது என்றாா் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சட்டத்துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத், பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT