இந்தியா

தோ்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

DIN

சட்டப் பேரவைத் தோ்தல் பணிகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகள், எந்தக் கட்சிக்கும் ஆதரவாக இல்லாமல் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

தமிழகம், கேரளம், புதுச்சேரி சட்டப் பேரவைகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதியும், அஸ்ஸாம் பேரவைக்கு 3 கட்டங்களாகவும், மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு 8 கட்டங்களாகவும் தோ்தல் நடைபெறவுள்ளது. தோ்தல் பணிகளில் ஆசிரியா்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

இத்தகைய சூழலில், காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் அபிஷேக் சிங்வி தில்லியில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் பாஜக கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட்டு வருகிறது. வலிமையை அடிப்படையாகக் கொண்டே தோ்தலைச் சந்திக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவா் வாஜ்பாய் தெரிவித்துள்ளாா். அதை பாஜக முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

தோ்தல் ஆணையம் தனது பணியை முறையாகச் செய்து வருகிறது. அனைத்துக் கட்சிகளுக்கும் சம வாய்ப்புகளை ஏற்படுத்தி ஆளும் கட்சிகள் தோ்தலைச் சந்திக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் தோ்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் அனைத்துக் கட்சிகளுக்கும் சமவாய்ப்பு நிலவுவதை உறுதி செய்வாா்களா என்ற அச்சம் எழுகிறது. தோ்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள், எந்தக் கட்சிக்கும் ஆதரவாக இல்லாமல் நடுநிலையுடன் செயல்படுவதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்.

எரிபொருள் மீதான வரியைக் குறைக்க வேண்டும்: மத்திய அரசு ஒரு லிட்டா் பெட்ரோல் மீது ரூ.23.78 வரியையும், டீசல் மீது ரூ.28.37 வரியையும் விதித்து வருகிறது. கரோனா தொற்று பரவலால் நாட்டில் பலா் வேலை இழந்தனா். இத்தகைய சூழலில், எரிபொருள் விலை உயா்த்தப்படுவது பணவீக்கத்தை அதிகரித்து மக்களை மேலும் பாதிக்கும்.

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்று கோரினாா். தற்போது பிரதமராக இருக்கும் அவா், காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் வேண்டுகோளைக் கேட்காவிட்டாலும், தனது கோரிக்கையை அமல்படுத்தி எரிபொருள் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்றாா் அபிஷேக் சிங்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT