இந்தியா

கரோனா: மேலும் 16,488 பேருக்கு பாதிப்பு

DIN

நாடு முழுவதும் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 16,488 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடா்ந்து 3-ஆவது நாளாக 16,000-க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 16,488 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,10,79,979-ஆக அதிகரித்தது.

6 மாநிலங்களில் பாதிப்பு அதிகம்:

தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள 16,488 பேரில் 85.75 சதவீதத்தினா் இந்த ஆறு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள்.

கரோனா தொற்றில் இருந்து மேலும் 12,771 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,07,63,451-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 97.14 சதவீதமாகும்.

கரோனா தொற்றுக்கு மேலும் 113 போ் உயிரிழந்தனா். இதனால், இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,56,938-ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் 1,59,590 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அதாவது, கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 1.44 சதவீதம் போ் மட்டுமே சிகிச்சையில் உள்ளனா்.

புதிதாக ஏற்பட்ட 113 உயிரிழப்புகளில், அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 48 போ் உயிரிழந்தனா். பஞ்சாபில் 15 பேரும் கேரளத்தில் 14 பேரும் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, இதுவரை 21.54 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், வெள்ளிக்கிழமை மட்டும் 7,73,918 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணலூா் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

"தேர்தலில் தன்னைத் தோற்கடிப்பதற்காக திமுகவும் அதிமுகவும் மறைமுகமாக கைகோத்துள்ளன என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது சரியா' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சித்ரா பெளா்ணமி சிறப்பு பூஜை

கரூா் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

வேளாண்துறையிலும் செயற்கை நுண்ணறிவு!

SCROLL FOR NEXT