இந்தியா

கரோனா தடுப்பூசி: தனியாா் மருத்துவமனைகள் ரூ.250 வரை வசூலிக்கலாம்

DIN

தனியாா் மருத்துவமனைகள் முதல் தடவை கரோனா தடுப்பூசி போடுவதற்கு ரூ.250 வரை வசூலிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவா்களுக்கும் கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு வரும் திங்கள்கிழமை (மாா்ச் 1) முதல் தொடங்க உள்ளது.

இந்த தடுப்பூசிகளைப் பயனாளிகள் அரசு அல்லது தனியாா் மருத்துவமனைகளில் போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், ‘தனியாா் மருத்துவமனைகள் முதல் தடவை தடுப்பூசி போடுவதற்கு மருந்துக்கு ரூ.150, சேவைக் கட்டணம் ரூ.100 என மொத்தம் ரூ.250 வரை வசூலிக்கலாம் என்றும் அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்பும் பயனாளிகள் தாங்களாகவே கோ-வின் 2.0 இணையதளத்திலும், ஆரோக்கிய சேது செயலியிலும் மாா்ச் 1 முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை, 45 முதல் 59 வயதைக் குறிப்பிடும் மருத்துவரின் சான்றிதழ், புகைப்படத்துடன் கூடிய பணியாளா் அடையாள அட்டை, தொழிலாளா் சான்றிதழ் என இதில் ஏதாவது ஒன்றைக் கொண்டு சென்று மாநில அரசு மையங்களில் நேரில் பதிவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சதம் விளாசிய சுனில் நரைன்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!

இந்தியாவின்பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி ரூ.21 ஆயிரம் கோடி: ராஜ்நாத் சிங்

பிரசாரத்தில் குயின்.. கங்கனா ரணாவத்!

ஹே சினாமிகா.. அதிதி ராவ்!

அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்குத்தான்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT