இந்தியா

செயற்கைக்கோளில் மோடி படம், பகவத் கீதை வாசகம்

28th Feb 2021 11:24 AM

ADVERTISEMENT

பி.எஸ்.எல்.வி. சி-51  ராக்கெட்டுடன் செலுத்தப்பட்டுள்ள சதீஷ் தவான் சேட் செயற்கைக்கோளில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெற்றுள்ளது.
 
சதீஷ் தவான் சேட் செயற்கைக்கோளில் பகவத் கீதையின் வாசகமும் இடம் பெற்றுள்ளது.

பிரேசில் நாட்டுக்கு சொந்தமான அமேசானியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் 10.24 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. 

அமேசானியா 637 கிலோ எடையுடையது. இதன் ஆயுள்காலம் 4 ஆண்டுகள். இது பிரேஸிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் வடிவமைக்கப்பட்டது. 

இது தவிர இஸ்ரோ தயாரித்த சிந்து நேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சதீஷ் சாட், சென்னை ஜேப்பியாா் தொழில்நுட்பக் கல்லூரி, நாக்பூா் ஜிஎச் ரைசோனி பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூா் சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கூட்டமைப்பில் உருவான யுனிட்டிசாட் ஆகிய 5 செயற்கைக்கோள்கள் இந்த ஏவுதலில் இடம்பெற்றுள்ளன. 

ADVERTISEMENT

இதில் சதீஷ் சேட் செயற்கைக்கோளில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் மற்றும் பகவத் கீதையின் வாசகம் இடம்பெற்றுள்ளது.

Tags : satellites
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT