இந்தியா

தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: இந்தியாவில் ஒரேநாளில் 16,752 பேர் பாதிப்பு

DIN

நாடு முழுவதும் இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 16,752 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து 4-ஆவது நாளாக 16,000-க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 16,752 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,10,96,731-ஆக அதிகரித்தது. 
கரோனா தொற்றில் இருந்து மேலும் 11,718 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,07,75,169-ஆக அதிகரித்தது. கரோனா தொற்றுக்கு மேலும் 113 போ் உயிரிழந்தனா். 
இதனால், இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,57,051-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 1,64,511 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 1,43,01,266 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, இதுவரை 21.62 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், நேற்று மட்டும் 7,95,723 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் புகைத் திரை உருவாக்கம் கேஜரிவால் உருக்கமான வாதம்

எம்சிடி நிதி நிலை: உயா்நீதிமன்றம் அதிருப்தி

பிஎம்எல்ஏ வழக்கு விவகாரம்: கேஜரிவாலின் காவல் ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு

மெட்ரோ ரயில் நிலைய தூணில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்: போலீஸாா் விசாரணை

மக்கள் மீது அக்கறை இருந்தால் கேஜரிவால் பதவி விலக வேண்டும்: தில்லி பாஜக

SCROLL FOR NEXT