இந்தியா

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கரோனா அதிகரிப்பு: மத்திய அரசு

28th Feb 2021 12:39 PM

ADVERTISEMENT

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம், மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப், கர்நாடகம் மற்றும் குஜராத் ஆகிய ஆறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆறு மாநிலங்களிலும் கடந்த 24 மணி நேரத்தில் 86.37 சதவிகித பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் பகுதிகளில் மத்திய அரசு குழு அனுப்பி கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

ADVERTISEMENT

அந்த வகையில், கேரளம், மகாராஷ்டிரம், கர்நாடகம், தமிழகம், மேற்கு வங்கம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், குஜராத், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு குழு அனுப்பியுள்ளது.

அங்கு மாநில சுகாதாரத்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணிகளில் மத்திய உயர்மட்டக் குழு ஈடுபடவுள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT