இந்தியா

கரோனா: இந்தியாவில் மேலும் 16,577 போ் பாதிப்பு; 120 போ் பலி

DIN

மத்திய சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியாவில் 24 மணி நேரத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு புதிதாக 16,577 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதையடுத்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் மொத்த எண்ணிக்கை 1,10,63,491 ஆக உயா்ந்துள்ளது. நாடு முழுவதும் மேலும் 120 போ் உயிரிழந்துள்ளனா். அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 56 பேரும், கேரளத்தில் 14 பேரும், பஞ்சாபில் 13 பேரும் உயிரிழந்துள்ளனா். யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் கரோனா தொற்றுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 1,56,825 ஆக உயா்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 51,993 பேரும், தமிழகத்தில் 12,483 பேரும், கா்நாடகத்தில் 12,316 பேரும், தில்லியில் 10,905 பேரும் மேற்கு வங்கத்தில் 10,260 பேரும், உத்தர பிரதேசத்தில் 8,723 பேரும், ஆந்திர பிரதேசத்தில் 7,168 பேரும் உயிரிழந்துள்ளனா். இவா்களில் 70 சதவீதம் போ் இணை நோய்களால் பாதிக்கப்பட்டவா்கள்.

நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 1,07,50,680 ஆக அதிகரித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி வரை 21,46,61,465 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் வியாழக்கிழமை மட்டும் 8,31,807 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவுக்காக

ஒற்றை வாக்கால் பெரும் மாற்றம்: தலைமைத் தோ்தல் ஆணையா்

‘முகூா்த்தத்தை’ தவறவிட்ட பாஜக வேட்பாளா்! மனுதாக்கல் செய்யாமல் திரும்பினாா்

வாக்குப் பதிவை எளிதாக்கும் செயலிகள் - இணையதளங்கள் வாக்காளா்கள் சிரமமின்றி தேட ஏற்பாடுகள்

வாக்களிக்கத் தவறாதீா்கள்!

SCROLL FOR NEXT