இந்தியா

வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் விவிபாட் கருவி

27th Feb 2021 05:40 PM

ADVERTISEMENT


ஒரு வாக்காளர் தான் அளித்த வாக்கு சரியாகப் பதிவாகியிருக்கிறதா என்பதை உறுதி செய்யும் கருவிதான் விவிபாட்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில், வாக்காளர்கள் தான் வாக்களிக்க விரும்புகிற வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக உள்ள ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் தனது வாக்குகளைப் பதிவு செய்கையில், வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் விவிபாட் கருவியின் மூலம், தனது வாக்கு சரியாகப் பதிவாகியிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.

அதாவது, விவிபாட் கருவி, ஒரு வாக்காளர் தான் வாக்களித்த வேட்பாளரின் பெயரையும் சின்னத்தையும் காண்பிக்கக் கூடிய ஒரு சிறிய அச்சிடப்பட்ட சீட்டை உருவாக்குகிறது. அந்தச் சீட்டு ஏழு வினாடிகள் அதிலுள்ள ஒரு சிறிய திரையில் ஒளிரும். அதனை வாக்காளர் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். 

ADVERTISEMENT

பின்னர், அச்சிடப்பட்ட காகிதச்சீட்டு தானாகவே வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் விவிபாட் கருவியோடு இணைக்கப்பட்டிருக்கும் ஒரு பெட்டியில் விழுந்துவிடும். 

இதன் மூலம், வாக்காளர்கள் தாங்கள் அளித்த வாக்குகள் சரியாகப் பதிவாகியிருக்கிறதா என்பதை உடனடியாக சரிபார்த்துக் கொள்ளலாம். அதோடு, ஒரு வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகள் தொடர்பாக ஏதேனும் முரண் ஏற்பட்டால், விவிபேட் பெட்டியிலுள்ள அச்சிடப்பட்ட சீட்டுகளையும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும் எண்ணுவதன் மூலம், வாக்குகளை சரிபார்க்க இயலும்.

கடந்த 2019-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவியான விவிபாட் கருவி பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : election TN Assembly VVPAT
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT