இந்தியா

உத்தரகண்ட் வெள்ளம்: இதுவரை 75 உடல்கள் மீட்பு

DIN

உத்தரகண்ட் மாநிலம் சமோலியில் ஏற்பட்ட பனிப்பாறை வெடித்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் இதுவரை 75 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

30 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், 205 பேர் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து, அங்குள்ள தௌலி கங்கா, ரிஷி கங்கா, அலக் நந்தா நதிகளில் கடந்த 7-ம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அங்கு மேற்கொள்ளப்பட்டு வந்த இரண்டு மின் நிலைய கட்டுமானப் பணிகளுக்காக தோண்டப்பட்டிருந்த சுரங்கங்களில் வெள்ள நீர் புகுந்தது. அதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

அவர்களைத் தேடும் பணியில் மாநில மீட்புப் படையினருடன், தேசிய பாதுகாப்பு மீட்புப் படையினரும், இந்தோ - திபெத் பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலூா் தொகுதியில் 19 வேட்புமனுக்கள் ஏற்பு

தோ்தல் பாா்வையாளா்களின் கைப்பேசி எண்கள் வெளியீடு

கல்லூரியில் மன நல பரிசோதனை முகாம்

4-8 வகுப்புகளின் தோ்வு அட்டவணையில் மாற்றம்

விழுப்புரம் தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் காவல் துறை பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT