இந்தியா

தரையில் புதைத்து வைத்திருந்த வெள்ளியை சுரங்கம் தோண்டி திருடியவர்கள் சிக்கினர்

27th Feb 2021 04:12 PM

ADVERTISEMENT

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் மருத்துவர் ஒருவர் தனது வீட்டின் தரைப்பகுதியில் புதைத்து வைத்திருந்த வெள்ளிப் பொருள்களை, சுரங்கம் தோண்டி திருடியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சுமார் 20 அடி நீளம் கொண்ட இந்த சுரங்கத்தைத் தோண்டி, சுரங்கம் வழியாகச் சென்று தரைப்பகுதியில் ஒளித்து வைத்திருந்த வெள்ளிப் பொருள்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

இது குறித்து காவல்நிலையத்தில் புகாரளித்த மருத்துவர், வீட்டில் கொள்ளைப்போன வெள்ளியின் அளவு எவ்வளவு என்பது குறித்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் காவல்துறையினர் கூறுகையில், மருத்துவரின் வீட்டுக்கு பின்புறம் ஒரு வீட்டை ரூ.87 லட்சம் கொடுத்து திருட்டுக் கும்பல் கடந்த ஜனவரி மாதம் வாங்கியது. அந்த வீட்டின் மதில் சுவர்களை உயர்த்திவிட்டு, அங்கிருந்து மருத்துவரின் வீட்டுக்கு சுரங்கம் தோண்டியுள்ளனர்.

ADVERTISEMENT

சரியாக அந்த வெள்ளிப் பொருள்கள் எங்கிருந்ததோ, அந்த இடத்துக்கு சுரங்கம் தோண்டிச் சென்று அங்கிருந்த பெட்டியை உடைத்து வெள்ளிப் பொருள்களை கொள்ளையடித்துள்ளனர்.

இந்த விஷயம், தனது வீட்டின் தரைப்பகுதியில் மேடுபள்ளம் ஏற்பட்ட போது, வெள்ளிப் பொருள்கள் வைத்திருந்த இடத்தைத் திறந்து பார்த்த மருத்துவர் வெள்ளிப் பொருள்கள் திருடுபோயிருப்பதை அறிந்து காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இந்த சம்பவத்தில், மருத்துவரின் நெருங்கிய நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்குத்தான், தரைப்பகுதியில் வெள்ளிப்பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தகவல் தெரிந்து அதனை திருட்டுக் கும்பலுக்குத் தெரிவித்துள்ளார்.

நண்பர் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இதில் தொடர்புடைய மேலும் 4 பேர் தேடப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tags : India jaipur silver
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT