இந்தியா

பிரதமராக ராகுலையே விரும்பும் தமிழகம், கேரளம்: ஆய்வு

27th Feb 2021 10:35 PM

ADVERTISEMENT


நாட்டின் பிரதமராக நரேந்திர மோடியைக் காட்டிலும் ராகுல் காந்தியையே தமிழகம் மற்றும் கேரள மக்கள் அதிகம் விரும்புவதாக ஐஏஎன்எஸ் சி-வோட்டர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாட்டின் பிரதமரை நேரடியாகத் தேர்வு செய்யும் வாய்ப்பு உங்களிடம் வழங்கப்பட்டால் நீங்கள் நரேந்திர மோடியைத் தேர்வு செய்வீர்களா அல்லது ராகுல் காந்தியைத் தேர்வு செய்வீர்களா என்று ஆய்வில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு ராகுல் காந்தியையே பிரதமராகத் தேர்வு செய்வேன் என கேரளத்தில் 57.2 சதவிகிதத்தினரும், தமிழகத்தில் 43.46 சதவிகிதத்தினரும் கூறியுள்ளனர். கேரளத்தில் 36.19 சதவிகிதத்தினர் மற்றும் தமிழகத்தில் 28.16 சதவிகிதத்தினர் மட்டுமே நரேந்திர மோடியைப் பிரதமராகத் தேர்வு செய்ய விரும்புவதாகக் கூறினர்.

பேரவைத் தேர்தல் வரவுள்ள மற்ற 3 மாநிலங்களில் நரேந்திர மோடியே ஆதிக்கம் செலுத்துகிறார். மேற்கு வங்கத்தில் 54.13 சதவிகிதத்தினரும், அசாமில் 47.8 சதவிகிதத்தினரும், புதுச்சேரியில் 45.54 சதவிகிதத்தினரும் மோடிக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

கேள்வி: பிரதமரை நேரடியாகத் தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைத்தால் யாரைத் தேர்வு செய்வீர்கள்?
  மாநிலங்கள் நரேந்திர மோடி ராகுல் காந்தி இருவருக்குமிடையிலான வித்தியாசம்
1. தமிழகம் 28.16 சதவிகிதம் 43.46 சதவிகிதம் 15.3 சதவிகிதம்
2. கேரளம் 36.19 சதவிகிதம் 57.92 சதவிகிதம் 21.73 சதவிகிதம்
3. புதுச்சேரி 45.54 சதவிதிதம் 32.82 சதவிகிதம் 12.72 சதவிகிதம்
4. மேற்கு வங்கம் 54.13 சதவிகிதம் 31.2 சதவிகிதம் 22.93 சதவிகிதம்
5. அசாம் 47.8 சதவிகிதம் 23.17 சதவிகிதம் 24.63 சதவிகிதம்
ஆய்வு: ஐஏஎன்எஸ் சி-வோட்டர்

 

Tags : rahul gandhi
ADVERTISEMENT
ADVERTISEMENT