இந்தியா

மகாராஷ்டிரம்: 10, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு 

PTI

மகாராஷ்டிர மாநிலத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இந்தாண்டு ஏப்ரல் 23 மற்றும் மே 21-ஆம் தேதியில் நடைபெறும் என்று அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. பின்னர் மத்திய அரசு அளித்த தளர்வுகளின் அடிப்படையில் மாநில அரசுகள் படிப்படியாகப் பள்ளிகள் திறப்பை அறிவித்துள்ளது. 

அந்தவகையில், மகாராஷ்டிர மாநிலத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 12-ம்(எச்.எஸ்.சி) வகுப்புக்கு ஏப்ரல் 23-ல் தொடங்கி மே 21-ஆம் தேதி வரையும், எஸ்.எஸ்.சி தேர்வு ஏப்ரல் 29 முதல் மே 20 வரையும் நடைபெறும் என்று மகாராஷ்டிர மாநில இடைநிலை மற்றும் உயர்நிலை வாரியத்தின் செயலாளர் அசோக் போசலே கூறியுள்ளார். 

பொதுத்தேர்வுகள் வழக்கமாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்தப்படுகின்றன. ஆனால் இந்தாண்டு கரோனா தொற்றுநோய் காரணமாகத் தேர்வுக்கான அட்டவணை மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிள் விற்பனை வீழ்ச்சி: மே 7 நிகழ்வு பலனளிக்குமா?

"விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பா? நாட்டின் அடிமைகளா?”: அய்யாக்கண்ணு

விவிபேட் வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

மக்களின் கவனத்தை திசை திருப்பும் மோடி: பிரியங்கா குற்றச்சாட்டு

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

SCROLL FOR NEXT