இந்தியா

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 16,488 பேருக்கு கரோனா: 113 பேர் பலி

DIN

புது தில்லி: நாட்டில் 24 மணி நேர காலகட்டத்தில் 16,488 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு 16,000-ஐக் கடந்துள்ளது. கடைசியாகக் கடந்த மாதம் 29-ஆம் தேதி 18,855 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 16,488 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக நாட்டில் அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,10,79,979-ஆக அதிகரித்தது. அதே காலகட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 113 போ் உயிரிழந்தனா்.

இதுவரை நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,56,938 போ் உயிரிழந்தனா். கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,07,63,451 போ் குணமடைந்தனா். இது மொத்த பாதிப்பில் 97.14 சதவீதமாகும்.

நாட்டில் தற்போது 1,59,590 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் விகிதம் 1.44 சதவீதமாக உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) புள்ளிவிவரப்படி வெள்ளிக்கிழமை வரையிலும் நாடு முழுவதும் 21 கோடியே 54 லட்சத்து 35 ஆயிரத்து 383 பேருக்கு கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், வெள்ளிக்கிழமை மட்டும் 7,73,918 பேருக்கு கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை  வரையிலும் 1 கோடியே 42 லட்சத்து 42 ஆயிரத்து 547 பேருக்கு கரோனா தடுப்பூசி மருந்துகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

ஹூபள்ளி கல்லூரி வளாகத்தில் மாணவி குத்திக்கொலை: இளைஞர் கைது

SCROLL FOR NEXT