இந்தியா

மிசோரமில் மார்ச் 1 முதல் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் திறப்பு

27th Feb 2021 11:10 AM

ADVERTISEMENT


ஐஸ்வால்: மிசோரமில் மார்ச் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் திறக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

உயர் மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் தலைமையில் கல்வி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், மார்ச் 1 முதல் உயர் கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளையில், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டு மூடப்பட்ட பள்ளிக் கல்லூரிகள் பல்வேறு மாநிலங்களில் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

ஏற்கனவே, 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT