இந்தியா

களையிழந்த ஆற்றுக்கால் பகவதியம்மன் பொங்கல் திருவிழா

27th Feb 2021 12:32 PM

ADVERTISEMENT


திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் பொங்கல் திருவிழா கரோனா பரவல் காரணமாக களையிழந்து காணப்படுகிறது.

உலகிலேயே அதிகப் பெண்கள் கூடி ஒரே நேரத்தில் பொங்கல் வைக்கும் திருவிழா, பெண்கள் மற்றும் வரிசையாக அமைக்கப்படும் பொங்கல் பானைகள், அடுப்புகள் இன்றி காணப்படுகிறது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, ஆண்டு தோறும் ஆற்றுக்கால் பகவதியம்மன் பொங்கல் திருவிழாவின் போது லட்சக்கணக்கான பெண்கள் ஒரே நேரத்தில் பொங்கல் வைக்கும் திருவிழாவுக்கு சுகாதாரத் துறை தடை விதித்து, இந்த ஆண்டு ஆற்றுக்கால் பகவதியம்மன் பொங்கல் விழாவை, அவரவர் வீடுகளிலேயே கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், வீட்டில் பொங்கல் வைத்து வழிபட்டு, சாலை மற்றும் பொதுவிடங்களில், பொங்கல் பிரசாதத்தை யாருக்கும் வழங்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன் காரணமாக, ஆண்டுதோறும் ஆற்றுக்கால் பகவதியம்மன் பொங்கல் திருவிழா, லட்சக்கணக்கான பெண்கள் கூடி பொங்கலிடுவதையும், வரிசையாக அடுக்கப்பட்ட பொங்கல் மற்றும் அடுப்புகளையும் காண முடியாமல் களையிழந்து காணப்பட்டது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT