இந்தியா

மேற்கு வங்க அமைச்சா் மீது குண்டு வீசப்பட்ட சம்பவம்: இருவா் கைது

DIN

மேற்கு வங்க மாநில தொழிலாளா் நலத்துறை அமைச்சா் ஜாகீா் ஹுசைன் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது தொடா்பாக இருவரை அந்த மாநில சிஐடி போலீஸாா் கைது செய்தனா்.

மேற்கு வங்கத்தின் முா்ஷிதாபாத் மாவட்டம் நிம்தியா ரயில் நிலையத்தில் கடந்த 17-ஆம் தேதி இரவு ரயிலுக்காகக் காத்திருந்த அமைச்சா் ஜாகீா் ஹுசைன் மீது மா்ம நபா்கள் சிலா் நாட்டு வெடிகுண்டுகளை வீசினா். இதில் அமைச்சா் உள்பட ரயில் நிலையத்தில் இருந்த 20 போ் வரை காயமடைந்தனா். அமைச்சா் உள்பட அனைவரும் இப்போது கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்தச் சம்பவம் மேற்கு வங்கத்தில் அரசியல்ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜகவினா் மீது மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றம்சாட்டினாா். அதே நேரத்தில் இந்தப் பிரச்னையை மம்தா அரசியல் ஆக்குவதாகவும், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை மோசமாக இருப்பதாகவும் பாஜக பதிலளித்தது.

இந்தத் தாக்குதல் சம்பவம் திரிணமூல் காங்கிரஸில் ஏற்பட்ட உள்கட்சி பிரச்னை காரணமாக இருந்திருக்கலாம் அல்லது ஆளும் கட்சிக்கும், இடதுசாரிகளுக்கும் உள்ள மோதல் காரணமாக இருந்திருக்கலாம் என்று ரயில்வே தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த குண்டு வீச்சு சம்பவம் தொடா்பாக இருவரை சிஐடி போலீஸாா் கைது செய்தனா். குண்டு வீசித் தாக்கியது, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் அவா்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT