இந்தியா

மேற்கு வங்கத்திற்கு மட்டும் எதற்காக 8 கட்டமாக தேர்தல்? மம்தா கேள்வி

DIN

மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில் மேற்கு வங்கத்திற்கு மட்டும் எதற்காக 8 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது என மம்தா பானர்ஜி விமர்சனம் எழுப்பியுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் வெள்ளிக்கிழமை அறிவித்தார். 

முதற்கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27, 2ம் கட்டம் ஏப்ரல் 1, 3ம் கட்டம் ஏப்ரல் 6, 4ம் கட்டம் ஏப்ரல் 10, 5ம் கட்டம் ஏப்ரல் 17, 6ம் கட்டம் ஏப்ரல் 22, 7ம் கட்டம் ஏப்ரல் 26, இறுதி கட்டம் ஏப்ரல் 29 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, “பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் ஆலோசனையின்படி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், “தேர்தல் ஆணையமே மக்களுக்கு நீதி வழங்காவிட்டால், மக்கள் எங்கே போவார்கள்? எந்த தந்திரங்களை பயன்படுத்தினாலும் திரிணமூல் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெறும்” எனத் தெரிவித்தார்.

பிற மாநிலங்களில் ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்த முடியும்போது மேற்குவங்கத்தில் மட்டும் எதற்காக 8 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது? என மம்தா பானர்ஜி விமர்சனம் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

SCROLL FOR NEXT