இந்தியா

மார்ச் 31 வரை கரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு: மத்திய அரசு

DIN

நாடு முழுவதும் தற்போதுள்ள கரோனா கண்காணிப்பு, கட்டுப்பாடுக்கான நிலையான செயல்பாட்டு விதிமுறைகளை மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவிட்டது. 
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை மற்றும் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருந்தாலும், தொற்றில் இருந்து முழுவதும் மீள  கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து பராமரிக்க வேண்டியுள்ளது.
அதற்கேற்ப, கட்டுப்பாட்டு மண்டலங்கள் தொடர்ந்து வரையறுக்கப்பட வேண்டும்; இந்த மண்டலங்களில் பரிந்துரைக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும்; பரிந்துரைக்கப்பட்ட நிலையான செயல்பாட்டு விதிமுறைகள் தீவிரமாக பின்பற்ற வேண்டும். 
ஆகையால், கடந்த 27.01.2021-ம் தேதி வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களில் தெரிவித்துள்ளபடி, கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் கடுமையாக பின்பற்ற வேண்டும்.
தொற்று பரவலை முறியடிக்கவும், தொற்றில் இருந்து மீளவும், தடுப்பூசி போடும் நடவடிக்கையை விரைவு படுத்தும்படியும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  
பிப்ரவரி 28ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வர உள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர்?

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

SCROLL FOR NEXT