இந்தியா

இமாச்சலப் பிரதேச பட்ஜெட் கூட்டத்தொடர்: 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

DIN

இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஆளுநரை சட்டப்பேரவைக்குள் வரவிடாமல் தடுத்ததாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் பண்டாரு தத்தாத்ராயா உரையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அப்போது ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். 

இதனால் தனது சுருக்கமான உரையை முடித்துக் கொண்டு ஆளுநர் பண்டாரு சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். அப்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை வழிமறித்ததாக அமைச்சர் சுரேஷ் பரத்வாஜ் புகார் தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் முகேஷ் அக்னிஹோத்ரி, ஹர்ஷ் வர்தன் செளகான், சுந்தர் சிங் தாக்கூர், சத்பால் ரைசாதா மற்றும் வினய் குமார் உள்ளிட்ட 5 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதாக சபைத்தலைவர் விபின் பர்மர் அறிவித்தார். 

இதனால் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் சபை நடவடிக்கைகளில் பங்குகொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமாச்சலப்பிரதேச பட்ஜெட் அமர்வு மார்ச் 20 அன்று நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தமிழ்க் கல்லூரியில் கவிதை நூல் அறிமுகம்

விருதுநகா்: 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

அரிசி ஆலை உரிமையாளா் வெட்டிக் கொலை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: ஆங்கிலப் பாடத்தை 754 போ் எழுதவில்லை

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT