இந்தியா

தேர்தலன்று நடைபெறும் மாதிரி வாக்குப்பதிவு

DIN


தமிழகத்தில் தற்போது தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. கட்சிகள் பலவும் விருப்ப மனுக்களைப் பெற்று வருகின்றன. முக்கியத்தலைவர்கள் மாவட்டந்தோறும் சென்று பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன.

மற்றொரு பக்கம் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளும் காரசாரமாக நடந்து வருகிறது. 

இதெல்லாம் இருக்க தேர்தல் நாளன்று நடைபெறும் ஒரு முக்கிய விஷயம் பற்றி இங்கு பார்க்கலாம்.

தேர்தல் நடைமுறையில் பொதுவாகவே வாக்குப்பதிவு நடைபெறும் நாள்தான் முக்கியமானது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகள் இயங்கும் தன்மையை வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யப்படுவது வழக்கம்.

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், சரியாக வாக்குப்பதிவு தொடங்க ஒன்றரை மணி நேரம் இருக்கும் போது, வாக்குச்சாவடி முகவர்கள், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் சுமார் 50 வாக்குகளை பதிவு செய்து, காண்பிப்பார்கள். அப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் அனைத்து பொத்தான்களையும் அழுத்தி, வாக்குப்பதிவு செய்யப்பட்டு, வாக்கினை சரிபார்க்கும் கருவியின் செயல்பாட்டையும் சரிபார்ப்பார்கள்.

பிறகுதான் மாதிரி வாக்குப்பதிவு வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கான சான்றிதழ், தலைமை அலுவலரால் வழங்கப்படும்.

மாதிரி வாக்குப்பதிவு முடிந்தவுடன், கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள அனைத்தையும் அழித்துவிடு (க்ளியர்) என்ற பொத்தான் மூலம் மாதிரி வாக்குப்பதிவின் போது பதிவான வாக்குகள் அழிக்கப்படும்.

எந்த வாக்கும் பதிவாகாமல் இருப்பதை அரசியல் கட்சிப் பிரநிதிகளும் உறுதி செய்து கொள்ள வேண்டும். வாக்குகளை சரிபார்க்கும் கருவியில் இருக்கும் தாள்களையும் அதிகாரிகள் அப்புறப்படுத்தி விடுவார்கள்.

இதுவே, ஒவ்வொரு வாக்குப்பதிவு மையங்களிலும், வாக்குப்பதிவு தொடங்குவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பு நடைபெறும் மாதிரி வாக்குப்பதிவாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT