இந்தியா

பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்கப் போவதில்லை: உ.பி. அரசு

DIN

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்கும் திட்டம் இல்லை என அம்மாநில பாஜக அரசு தெரிவித்துள்ளது.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்போது இந்திய எண்ணெய் நிறுவனங்களும் சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து வருகின்றன. நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மத்திய, மாநில அரசுகளின் வரி விகிதம் ஒரு லிட்டா் பெட்ரோல் விற்பனையில் 60 சதவீதமாகவும், டீசல் விற்பனையில் 54 சதவீதமாகவும் உள்ளன.

இந்நிலையில் கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கு போதிய நிதியாதாரம் தேவைப்படுவதால் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருள் மீதான வரியை குறைக்கப்போவதில்லை என உத்தரப்பிரதேச மாநில பாஜக அரசு தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை மாநில சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது சமாஜ்வாதி கட்சி சட்டமன்ற உறுப்பினர் நரேந்திர வர்மா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சதீஷ் மகானா, “பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியைக் குறைக்க எந்த திட்டமும் இல்லை. பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது உத்தரப்பிரதேசத்தில் குறைந்த விலையில் பெட்ரோல் கிடைக்கிறது” என அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT