இந்தியா

தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களை சந்திக்கிறது காங்.: அமித் ஷா

DIN

தேர்தல் நேரத்தில் மட்டுமே காங்கிரஸ் கட்சி மக்களை நோக்கி வருவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

அசாம் மாநிலம் நாகான் பகுதியில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் அமித் ஷா, ''பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் அசாம் மட்டுமல்ல ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும் வளர்ச்சி அடைந்துள்ளன.

அசாம் மாநிலம் போராட்டங்களுக்கும், வன்முறைக்கும் மட்டுமே அடையாளம் காணப்பட்ட நிலையில், பாஜக ஆட்சி அதனை மாற்றியமைத்தது. அசாம் மாநிலத்திற்கு மோடி செய்த அனைத்தும் பெருமையையே கொண்டுவந்து சேர்த்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் தருண் கோகோயும் அசாம் மாநில வளர்ச்சிக்கு உழைத்தார். அதனால் பிரதமர் மோடி ஆட்சியில் அவருக்கு பம்ப பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. 

தேர்தல் நேரங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி மக்களை சந்திக்கிறது. அவர்கள் தில்லி சாலைகளிலேயே சுற்றிக்கொண்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்காக மட்டுமே மக்களை சந்திக்கின்றனர். அதுதான் தற்போதும் நடக்கிறது'' என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

SCROLL FOR NEXT